Wednesday, November 4, 2009

தேடல்

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அதிகம் பேர் கேட்டது -

ஏன் இப்படி பைத்தியகாரதனமாக ஆன்மிகம், அது, இது என்று அலைந்து கொண்டிருக்கிறாய் ?

ஏன் எல்லோரையும் போல் NORMAL ஆக வாழாமல் - ABNORMAL ஆக இருக்கிறாய் ?

எல்லா மனிதரை போல் நிறைய பணம், பொருள், சேர்கை தேடு...

-----------------

நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்... நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.

NORMAL ஆக இருக்கிறேனா -ABNORMAL ஆக இருக்கிறேனா என்பது என்னை பார்ப்பவர்களை பொறுத்த விஷயம்.

And that calculation is based on their earlier input and databases.

----------

ஒரு கதை.

ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது.

அந்த ஊரில் வெயில் காலத்தில் எல்லோரும் வீடுகளிலும், குடிசைகளிலும் வசிப்பார்கள்.

மழை வந்து விட்டால், மரத்தின் மேல் வசிப்பார்கள்.

ஏனென்றால், மழை வந்து சில நாட்களில் அவர்கள் ஊரின் அருகில் இருக்கும் மலை பக்கம் இருந்து வெள்ளம் வரும்.

இதுவே அங்கு வாழ்க்கை முறை.

அந்த ஊரில் இருந்த ஒருவன் ஏன் வெள்ளம் வருகிறது என்று யோசித்தான்.

ஊர் பெரியவர்களிடம் கேட்டான்.
யாரும் திருப்திகரமாக பதில் தரவில்லை.

சிலர் அந்த மலையின் பக்கம் போக கூடாது என்று கூறினார்கள். அது இன்னும் நம் வாழ்கையை கஷ்டம் ஆக்கி விடும் என கூறினார்கள்.

சிலர், இது தான் வாழ்கை. இது தான் விதி என கூறினார்கள்.

யாரும் அந்த வெள்ளத்தின் காரணத்தை அறிய முற்படவே இல்லை.

மழை வந்தது.

அவனால் இந்த காரணத்தை அறியாமல் இங்கு வாழ விருப்பம் இல்லை.

அவன் மழையிலே அந்த மலைபகுதியை நோக்கி நடந்தான்.

வெகு தூரம் நடந்து வந்து விட்டான்.

அந்த மலை மீது ஏறினான்.

பல நாட்கள் கழிந்து விட்டன.

அங்கு சென்று பார்த்தால், அங்கே கடல் அளவிற்கு பெரிய ஏரி இருந்தது.

அந்த ஏரி நிறைந்து வழியும் தண்ணீர் தான் அவர்கள் கிராமத்திற்கு வரும் வெள்ளம் என்று புரிந்து கொண்டான்.

ஊருக்கு திரும்பி வந்து, அவர்கள் வீடுகளை சில தூரம் தள்ளி, மீண்டும் கட்ட வைத்தான்.

அதற்கு பின், அந்த ஊருக்கு வெள்ளம் வரவே இல்லை.

-----------

இப்படி தான் நாமும் இந்த ஊரில், ஏன் வந்தோம், ஏன் இறக்கிறோம், என தெரிந்து கொள்ளாமலே, அந்த கிராம மக்கள் போல, வெள்ளம் இருந்தால் மரம் மேல், இல்லையென்றால் குடிசைக்குள் என வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பல ஆயிரம் வருடங்களாக இப்படியே உலகில் அநேகர் வாழ்வதால், இது தான் வாழ்கை என நினைத்து நாமும் வாழ்கிறோம்.

யாருமே வெள்ளம் ஏன் வருகிறது என பார்க்க முனைவதில்லை.

எனக்கு அது தெரிய வேண்டும்.

அந்த அடிப்படை கேள்விகளுக்கான பதிலை தான் நான் தேடி கொண்டிருக்கிறேன்.

அந்த தேடலுக்கு பெயர் ஆன்மிகம் என்றால், அதை பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை.

பெயர்கள் வெறும் அடையாளங்கள்.

அந்த தேடலினால் நான் ABNORMAL என கூறப்பட்டால், அதுவும் என்னை பார்ப்பவர்களின் கருத்து தானே தவிர, எனக்கு அது எந்த விதத்திலும் வித்தியாசம் இல்லை.

நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்.

நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.

I KNOW - I AM.
- JUST I AM

No comments:

Post a Comment