சரணாகதி
நீங்கள் உங்கள் நண்பர்களை அல்லது உறவினர்களை கண்டால் ஆரம்பமே - எப்படி இருகிறீர்கள் என நலம் விசாரிக்கிறீர்கள். என்றாவது உங்கள் பகவான், அதாவது கடவுள்
- உங்களுக்காக இந்த உலகத்தை படைத்தவர்,
- உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர்,
- உங்களை இயக்குபவர்,
- ஆதியும் அந்தமும் இல்லாது இருப்பவர்.
அவரை கேட்டு இருக்கிறீர்களா - எப்படி உள்ளீர் என்று ?
அவருக்கு எவ்வளவு வேலைகள். எத்தனை பொறுப்புகள்.
ஒரு நாள், அதாவது ஒரு பகல் கூடுதலாக வேலை செய்து விட்டால், உங்களுக்கு அதிகமாக ஒய்வு தேவை படுகிறது. ஒரு மணித்துளி கூட ஒய்வு இல்லாமல் வேலை செய்கிறார் அவர்.
அதற்கு அவருக்கு தெம்பு இருக்கிறது. அந்த அளவுக்கு சக்தி படைத்தவர் என்பதை ஒத்து கொள்கிறேன்.
அனால் நீங்கள் செய்யும் வேலை யாருக்காக செய்கிறீர்கள்?
- உங்களுக்காக...
- உங்கள் தேவைகளுக்காக...
- உங்கள் சுயலாபத்துக்காக...
அனால் அவர்,
தனக்காக எதுவுமே செய்வதில்லை..
- எல்லாம் உங்களுக்காக..
- எல்லாம் எனக்காக..
- எல்லாம் நமக்காக...
அனால் அவரிடம் வேண்டுதல் என மேலும் மேலும் உங்கள் தேவைகளுக்காக கேட்டு கொண்டிருகிறீர்களே தவிர அவர் கொடுப்பதை கொண்டு திருப்தி அடைந்ததாக இல்லை.
மேலும், நமக்காக இவ்வளவு
- செய்து இருக்கிறாரே..
- செய்து கொண்டு இருக்கிறாரே...
- இன்னும் செய்வாரே ..
அவரை, நாம் என்றாவது நன்றியுடன் சரணடைந்து இருக்கிறோமா?
அவருக்கு ஒய்வு தேவை இல்லையா? மேலும் மேலும் கேட்டு கொண்டே இருந்தால் அவருக்கு ஒய்வு ஏது?
எனக்கு எனக்கு என எவ்வளவு தான் சேர்த்து வைத்து இருந்தாலும், ஒரு நாள்அந்த மூட்டையை விட்டு தான் செல்ல வேண்டும்.
அப்படி விட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என தெரிந்த பின், மூட்டையைபெரிதாக விட்டு சென்றால் என்ன? சிறிதாக விட்டு சென்றால் என்ன?
மேலும் மேலும் இறைவனை வேலை வாங்குவதில் என பயன்?
நீங்கள் கேட்பது எல்லாமே, இங்கே விட்டு செல்லும் மூட்டையில் சேர்த்து கொள்ள தானே?
பணம், பொருள், வீடு, கார், உடை, நகை, ஏன் உங்கள் உடம்பு கூட இங்கே விட்டு செல்ல வேண்டியது தானே?
பட்டினத்தார் கூறியது போல, என்னதான் சேர்த்து வைத்தாலும், காதறுந்த ஊசி கூட உங்களுடன் வராது.
உண்மை தானே ?
இப்படி பட்ட, உண்மையில் தேவை இல்லாத பொருட்களை பெற இறைவனை வேலை வாங்குகிறீர்கள்.
இதில் பகவானுக்கே லஞ்சம் வேறு..
கேவலமாக இல்லை??
நீ எனக்கு இதை கொடு, நான் பதிலுக்கு அதை செய்கிறேன் ... என்று...
வெட்கம் ...
இறைவனை ரசிக்க வேண்டும்..
இறைதன்மை இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் உள்ளது.
எல்லாமே ஒன்றுதான்.
உருவகங்கள் தான் வேறு.
இறைவனிடம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
வேறு எதற்கும் அவரிடம் கேட்க அவசியமே இல்லை.
ஏனென்றால் இந்த உலகில் எல்லாமே உள்ளது.
எந்த குறையும் இல்லை.
எந்த தேவையும் இல்லை.
இறைவனை மட்டும் சரணடைய வேண்டும்.
அதுவே இந்த மனித பிறவியின் பயன்...
No comments:
Post a Comment