தியாகராஜா பாகவதர்
திரைப்படம் - அசோக் குமார்
பாடல் - பாபநாசம் சிவன்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்ல மடிந்திடவோ ?
காலமும் செல்ல மடிந்திடவோ ?
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய,
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய,
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரை போற்றுதல் நம் கடனே
புத்தரை போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண் மீதிலோர் சுமையே
பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரனே
மண் மீதிலோர் சுமையே
பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரனே
No comments:
Post a Comment