Wednesday, January 13, 2021

காண்

 காண்


கனவுக்கடலில்

காலத்துடுப்புடன்

இருபசி யுடலால்

இறைபசி தேடாமல்

தலை கரையா

தனால் தனை புரியா


வீடு பேறு கிட்டாமல்

வாழ் வேன் தெரியா

வழிபாடில் வழிபெறா

வாசி வா சிவா யென

நாசி வழி வெளியேறி

காலா எக்காலம்


நீ எனை காண் 

Friday, January 1, 2021

காண்

காண்

ஞாயிறுடன் ஞாலத்தின்

தொடா தொடர்பின் 



பிரதட்சண கலவியில்

உய்த்த ஆனந்த பூவுலகில் 

அனைத்துயிரும் ஆருயிராய்


உள் நிறை அன்பு நெறியே

வாழ்வியலின் இலக்கணமாய் 


இப்புவியின்  காதல் 

மறுபிரதட்சணாரம்ப தினமதில்

அன்பால் காதலால் பூவுலகில்


என்றும் சொர்க்கம் காண்.