Monday, November 16, 2020

காண்

 காண் 


மயி லிறகிலுறை நீர் திவலை

செறுக் கொடு 

கீழுறை நீர் சேறாய் காண்


மண்ணோ டுறை நீ 

நிறமி ழந்து சேறாகினாய்

நானிருக்கும் நிலை 

நீயுணர யென்ன தவம் செய்வாய்


நிலமதி லுறை நீர் 

நகைப்புடன்

நித்திலம் தன்னழகை 

யென்றுமுணரா


கணப் பொழுதில்

மயிர் சிலிர்ப்ப மஞ்சையாட

திவலை சேறுடன் கலவிட


பீலிமேல் நின்று நான்

மயிலி னழகை 

காணாமலே போயிருப்பேனே


உடனுறை வதே வதையோ

விலகி காண் நீ தேவதையோ

மயிலே 


நிஜமாய் நிலமெனை 

விழவிடாஎன்றும்

நின்னழகை நானுணர

விலக செய்த இறை


நன்றியு டனே திவலை

No comments:

Post a Comment