விழாவிட்டால்
எழுவது புரியா
ஞாயிறு முழுவதானால்
மதி என்ன மதி யரியா
ஊன் வலி உரையா
ஏது பிணி் என்றுணரா
பிரியாமல் நிச்சயம்
பிணைப்பின் சுகம் தெரியா
சறுக்கல் இல்லையேல்
ஏற்றம் என்ன தெரியா
ஒன்று இல்லாத தாலே
மற்று இருப்பதென்பது
புரிய அரிய உணர
இயன்றதாவதால்
இறையே
இன்னும் பல விடயம்
என் வாழ்வில்
இல்லாத தாக ஆக்குவாயா
செல்வதற்க்குள்
இன்னும் என்னென்ன
உண்டென
நானுணர…
No comments:
Post a Comment