காண்
சுவாசமே கவியாய்
மொழியின் ரதி
தேமதுர தமிழில்
நீ பா அமைத்து
நின் பா ரதியில்
என்
விழி நுழைந்து
நினை களித்து
வினை கழித்து
பிரதி
என்று நினை காண்
ஏங்கி நான் விரதி
காண்
சுவாசமே கவியாய்
மொழியின் ரதி
தேமதுர தமிழில்
நீ பா அமைத்து
நின் பா ரதியில்
என்
விழி நுழைந்து
நினை களித்து
வினை கழித்து
பிரதி
என்று நினை காண்
ஏங்கி நான் விரதி
காண்
பலப்பல உயிர்கள்
பல காலொடு எறும்பு
இரு காலொடு சிறு அரும்பு
ஒரு காலொடு கரும்பும்
சிறு காம்பொடு மலரும்
என்முன்
முக்கண்முன்
தன்நிலையுணரா
கீழோர்
முது ணரா
முதுவர்
எத்துனை உயிர்கள்
துணை இல்லா நிலை இல்லா
நிலையுணர விளை இல்லா
மலரோ கரும்போ ஒருமுறை
அரும்போ எறும்போ சிலமுறை
ஆதியும் மதியும் பல பலமுறை
என்முன்
முக்கண்முன்
மறைப்பால் மறையுணரா
கனவாய் காற்றோடு
காண்
மயி லிறகிலுறை நீர் திவலை
செறுக் கொடு
கீழுறை நீர் சேறாய் காண்
மண்ணோ டுறை நீ
நிறமி ழந்து சேறாகினாய்
நானிருக்கும் நிலை
நீயுணர யென்ன தவம் செய்வாய்
நிலமதி லுறை நீர்
நகைப்புடன்
நித்திலம் தன்னழகை
யென்றுமுணரா
கணப் பொழுதில்
மயிர் சிலிர்ப்ப மஞ்சையாட
திவலை சேறுடன் கலவிட
பீலிமேல் நின்று நான்
மயிலி னழகை
காணாமலே போயிருப்பேனே
உடனுறை வதே வதையோ
விலகி காண் நீ தேவதையோ
மயிலே
நிஜமாய் நிலமெனை
விழவிடா, என்றும்
நின்னழகை நானுணர
விலக செய்த இறை
நன்றியு டனே திவலை