Thursday, May 6, 2021

இல்லாததே இனிமை



விழாவிட்டால் 

எழுவது புரியா


ஞாயிறு முழுவதானால்

மதி என்ன மதி யரியா


ஊன் வலி உரையா

ஏது பிணி் என்றுணரா


பிரியாமல் நிச்சயம்

பிணைப்பின் சுகம் தெரியா


சறுக்கல் இல்லையேல்

ஏற்றம் என்ன தெரியா


ஒன்று இல்லாத தாலே

மற்று இருப்பதென்பது 

புரிய அரிய உணர

இயன்றதாவதால்


இறையே

இன்னும் பல விடயம்

என் வாழ்வில்

இல்லாத தாக ஆக்குவாயா


செல்வதற்க்குள்

இன்னும் என்னென்ன

உண்டென 

நானுணர