காண்
கனவுக்கடலில்
காலத்துடுப்புடன்
இருபசி யுடலால்
இறைபசி தேடாமல்
தலை கரையா
தனால் தனை புரியா
வீடு பேறு கிட்டாமல்
வாழ் வேன் தெரியா
வழிபாடில் வழிபெறா
வாசி வா சிவா யென
நாசி வழி வெளியேறி
காலா எக்காலம்
நீ எனை காண்
ஞாயிறுடன் ஞாலத்தின்
தொடா தொடர்பின்
பிரதட்சண கலவியில்
உய்த்த ஆனந்த பூவுலகில்
அனைத்துயிரும் ஆருயிராய்
உள் நிறை அன்பு நெறியே
வாழ்வியலின் இலக்கணமாய்
இப்புவியின் காதல்
மறுபிரதட்சணாரம்ப தினமதில்
அன்பால் காதலால் பூவுலகில்
என்றும் சொர்க்கம் காண்.